விளையாட்டுத்துறை மானியக்கோரிக்கைக்கு பதில் அளித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் கேப்டன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது. சென்னையை விளையாட்டு தலைநகராக்கிய முதல்வருக்கு நன்றி. வடக்கில் இருந்து வந்து யாரும் தமிழ்நாட்டை வென்றது கிடையாது. எவரெஸ்ட் சிகரம் ஏறும் விருதுநகர் முத்தமிழ் செல்விக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் மொத்தம் 8 ஆயிரம் அடி எவரெஸ்டில் ஏற உள்ளார். தற்போது அவர் 5 ஆயிரம் அடி ஏறிக்கொண்டிருக்கிறார்.
விளையாட்டு வீரர்களுக்கு ரூ.11 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது. விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறேன். எந்த பரிந்துரையும் இல்லாமல் பயிற்சியாளர்கள் வெளிப்படை தன்மையுடன் நியமிக்கப்படுகிறார்கள்.
ஹாக்கி வீரர் அரியலூர் கார்த்திகேயனுக்கு வீடு வழங்கப்பட்டு உள்ளது. மகளிருக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.