தஞ்சை மாவட்டம், பாபநாசம் வங்காரம் பேட்டை அரசு உதவிப் பெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைப் பெற்றது. அரசு பொறியியல் கல்லூரி சேர்மன் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஆசிரியை தீபா ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளித் தலைமையாசிரியர் கிருஷ்ண மூர்த்தி வரவேற்றார். பாபநாசம் பெனிபிட் பண்ட் நிர்வாக இயக்குநர் ஆறுமுகம், ஓய்வு கூடுதல்
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தங்கராசன், ஓய்வு தலைமையாசிரியர் ஜோசப், ஜெயராஜ், கிருஷ்ண குமார் வாழ்த்தினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப் பெற்றன. இதில் தன்னார்வலர்கள், உதவி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஆசிரியை சங்கீதா நன்றி கூறினார்.