தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றி கவர்னர் ஆர்.என். ரவிக்கு அனுப்பியது. அதை அவர் பல மாதங்கள் கிடப்பில் போட்டு விட்டு திருப்பி அனுப்பினார். இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் சட்டசபையில் அதே தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி கவர்னர் ரவிக்கு அனுப்பினர் திடீரென அவர் அந்த தீர்மானத்துக்கு சற்று முன் ஒப்புதல் அளித்து உள்ளார்.
கவர்னர் ரவி தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்துகிறார். அவருக்கு மத்திய அரசும், ஜனாதிபதியும் அறிவுரை வழங்க வேண்டும் என காலையில் தமிழக சட்டமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அவர் சற்று முன் ஆன்லைன் ரம்மி தடைக்கு ஒப்புதல் அளித்து உள்ளார்.
இந்த மசோதா நிறைவேறிவிட்டால் ஆன்லைன் ரம்மி விளையாடினால் 3 மாதம் சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது இந்த மசோதாவின் முக்கிய அம்சம்
இது குறித்து அரசியல் வல்லுனர்கள் கூறும்போது, 2ம் முறை ஒரு மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும் என்ற விதிப்படி இன்று மாலை ஒப்புதல் அளித்தாரா?அல்லது தன் மீதான கண்டன தீர்மானம் நாளை அதிகமாக பேசப்படும் நிலையை தவிர்க்க இன்று சரியான நேரத்தில் இதற்கு ஒப்புதல் அளித்தாரா என தெரியவில்லை. இதுபோல மற்ற மசோதாக்களுக்கும் அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என்றனர்.
கடந்த வாரம் கவர்னர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவர்னர், கவர்னர் ஒரு மசோதாவை கிடப்பில் போட்டிருக்கிறார் என்றால் அது நிராகரிக்கப்படுகிறது என பொருள் என்ற தொனியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.