ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. இவருக்கும் சாம்ராஜியம் என்பவருக்கும் திருமணமாகி, திருமண வயதில் மகனும், மகளும் உள்ளனர். 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக சாம்ராஜியத்தை கைவிட்ட வாசு, மௌனிகா என்பவரை 2ம் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், நெல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காவல் ஆய்வாளர் வாசு கள்ளத் தொடர்பில் இருப்பது சாம்ராஜ்யத்திற்கு தெரியவந்தது. மறுமணம் செய்த கோபத்தில் இருந்தவருக்கு, கள்ளத்தொடர்பு சமாச்சாரமும் தெரிந்ததால் கொந்தளித்த அவர், வாசுவை கையும் களவுமாக பிடித்து பாடம் கற்பிக்க நினைத்தார். இது குறித்து 2வது மனைவிக்கும் தெரிவித்தார். மௌனிகாவும் இதற்கு ஆதரவு தெரிவித்தார்.
சம்பவத்தன்று வாசு கள்ளக்காதலி வீட்டில் ஜாலியாக இருந்தார். இதை அறிந்து அங்கு சென்று சாம்ராஜியம் அவரது மகன் மற்றும் உறவினர்கள் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு அங்கிருந்து மௌனிகாவுக்கும் தகவல் தெரிவித்தனர். அவரும் விரைந்து வந்தார். பின்னர் கதவை தட்டினர். சிவபூஜையில் கரடி புகுந்த மாதிரி யாருடா என்ற தோரணயைில் வாசு லுங்கி மட்டும்
கட்டியிருந்த நிலையில் வெளியே எட்டிப்பார்த்தார்.
வெளியே திரண்டிருந3்த சாம்ராஜியம் குடும்பத்தினர் வாசுவை வெளியே இழுத்து போட்டு அடி, உதை போட்டனர். வாசுவம் சளைக்கவில்லை. எதிர்த்து போராடினார். அப்போது தான் மௌனிகாவும் அங்கு நிற்பது தெரிந்து அதிர்ச்சிக்கு உள்ளானார். அவரும் தன் பங்குக்கு அடிபோட்டார்.
அதோடு விடவில்லை. 2 குடும்பத்தாருஇ் சேர்ந்த மௌனிகாவை வெளியே வரும்படி கூறினர். ஆனால் அவர் இருந்த கோலம் வெளியே உடனடியாக வரமுடியவில்லை. அதுவரை பொறுக்க முடியாதவர்கள் உள்ளே புகுந்து மௌனிகாவுக்கும் செம மாத்து கொடுத்தனர். இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.