தஞ்சை மாவட்டம் , பாபநாசம் அருகே உள்ள வங்காரம் பேட்டை, அருந்தவபுரம், நடுப்பட்டி, இரும்புதலை, பூண்டி ஆகிய கிராமங்களில் விழிப்புணர்வு தினம் சுகாதார விழிப்புணர்வு கூட்டம் செயலாளர் தங்க. கண்ணதாசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. உடல் நலம், சத்தான உணவு, இயற்கை உணவு, சிறுதானிய உணவு, பழங்கள், கீரைகளின் நன்மைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் சுற்றுப்புற சூழல், சுத்தமான குடிநீர், பாதுகாப்பு, சர்க்கரை நோயின் தாக்கம் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கானக்குயில், இசையருவி, மகுடம், பூமயில், பூந்தோட்டம், இறைவி ஆகிய மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விவேகானந்தா சமூக கல்வி சங்க பணியாளர்கள் புனிதா, கௌரி, மகாலட்சுமி, பரமேஸ்வரி, ராமலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.