தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் “உடன் பிறப்புகளாய் இணைவோம்” உறுப்பினர் பதிவு விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சியை ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார் தென்னமநாடு ஊராட்சியில் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய அவைத்தலைவர் பால்ராஜ், துணைச் செயலாளர்கள் ராம்குமார், கீதா ஞானசேகர், மாவட்ட பிரதிநிதிகள் குமாரவேல், சுந்தர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அஞ்சாநெஞ்சன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஊராட்சி மன்ற தலைவர் அருவி முருகேசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முருகையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.