16வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 31ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று குஜராத்- கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ஆமதாபாத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 204 ரன்களை சேர்த்தது. நேற்றைய போட்டியில் கேப்டன் பாண்டயா ஆடவில்லை. அவருக்கு பதில் ரஷித்கான் கேப்டன் பொறுப்பேற்றிருந்தார்.
அடுத்ததாக பேட் செய்த கொல்கத்தா அணி இலக்கை நோக்கி நகர்ந்தது. குஜராத்தின் பந்து வீச்சுகளை சமாளித்து கொல்கத்தா ரன்களை குவித்தது. வெங்கடேஷ் அய்யர்(83) அவுட் ஆன நிலையில் கொல்கத்தாவின் வெற்றி கேள்விக்குறியானது. அதைத்தொடர்ந்து கே்படன் ரஷித் கான் ஒரே ஓவரில் தொடாந்து 3 விக்கெட்டுகளை சாய்த்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். அப்போது குஜராத் அணியின் வெற்றி பிரகாசமாக இருந்தது.
கொல்கத்தா தோல்வியை தழுவும் என்று ஒட்டு மொத்த ரசிகர்களும் கணித்திருந்த நிலையில் ரிங்கு சிங், ஆட்டத்தின் ரிங் மாஸ்டராகி ரன்களை குவித்தார். கடைசி
ஓவரில் 29 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை கொல்கத்தாவுக்கு. இந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயான் வீசினார்.
முதல் பந்தை சந்தித்த உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுத்தார். அடுத்ததாக ரிங்கு சிங் பந்தை எதிர்கொண்டார்.அவர் முதல் பந்திலேயே சிக்சர் விளாசி மைதானத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அடுத்தடுத்து வந்த 2 பந்துகளையும் சிக்சராக்கி அனைத்து ரசிகர்களையும் இருக்கைளில் இருந்து எழுப்பி விட்டார் ரிங்கு. கடைசி 2 பந்துகள் இருக்கும் நிலையில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 10ரன்கள் தேவைப்பட்டது. அந்த 2 பந்துகளிலும் இரண்டு சிக்சர்கள் அடித்த ரிங்கு சிங் கொல்கத்தாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றதுடன், குஜராத் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீர்த்தினார். இதனால் ரசிகர்கள் கரகோஷம் விண்ணைப்பிளந்தது. கொல்கத்தா வீரர்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த ரசிர்களும் ரிங்கு சிங்கை காண்டாடினர்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் எடுக்கப்பட்ட அதிக ரன் என்ற சாதனையை ரிங்கு ஏற்படுத்தி உள்ளார்.