மலேசியத் தொழிலதிபர் சின் ரவுத்தர் டத்தோ ஷாகுல் ஹமீது ஷாஃபி சார்பில் பாபநாசம் அடுத்த இராஜகிரி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழ்மை நிலையிலுள்ள 1,000 பேருக்கு ரமலானை முன்னிட்டு ரூ 2,000 மதிப்பிலான அரிசி, துவரம் பருப்பு, ஜீனி, டீத் தூள், எண்ணெய், பால் பவுடர், கொண்டக் கடலை, பேரீச்சம் பழம் உள்ளிட்ட 20 க்கும் மேற்ப் பட்ட மளிகைப் பொருட்கள் அடங்கியத் தொகுப்பு இராஜகிரி பெரிய பள்ளியில் வழங்கப் பட்டது. இதில் பெரிய பள்ளித் தலைவர் யூசுப் அலி, துணைச் செயலர் சபீர் அகமது, நாசர், கஜ்ஜாலி, கமால் பாட்சா, அப்துல் மாலிக், பெரிய பள்ளி நிர்வாகிகள், செயலாளர் முகம்மது சுல்தான், வெல்பேர் தலைவர் காசிம், வெல்பேர் நிர்வாகிகள், ஜமாஅத்தார் உள்பட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.