தமிழக அரசால் 16 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட மகாதானத் தெரு, பெரிய கடை வீதி, கச்சேரி சாலை, கொரநாடு ஆகிய பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனம், உணவகங்கள், தேநீர் கடைகள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. ரூ,1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீறி பயன்படுத்தப்படும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சயிர் தெரிவித்தார். வணிக நிறுவனம் ஆய்வு செய்யப்படும் பொழுது இங்கு பிளாஸ்டிக் விற்பனை இல்லை என விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கடையில் ஆய்வு செய்யப்பட்ட பொழுது பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.இவ்வாய்வின் போது மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ் ஒளி,மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.