மயிலாடுதுறையை அடுத்துள்ள சீனிவாசபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்திலிருந்து, கடந்த 6ஆம் தேதி நள்ளிரவில் திடீரென்று அபாய சங்கு ஒலித்துள்ளது, அருகில் உள்ள பள்ளிவாசலிலிருந்து வாலிபர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது ஒரு மர்மநபர் ஏடிஎம் மையத்திலிருந்து தப்பியோடியதைக் கண்டனர். ஏடிஎம் வாசலில் இருந்த சிசிடிவி கேமரா திருப்பிக் கிடந்தது, அறையில் இருந்த கேமராவும் உடைக்கப்பட்டிருந்தது, இதுகுறித்து மயிலாடுதுறை பேலீசார் ஏடிஎம் அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர், மர்ம நபரின் உருவப்படத்தை வைத்து மயிலாடுதுறை திருஇந்தளூர் சாலையில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது சந்தேகத்திற்கிடமான வாலிபரை பிடித்து விசாரித்தனர், ஏடிஎம் எந்திரத்தை உடைத்து திருட முயற்சித்தது அவன்தான் என்று தெரியவந்தது, ஏடிஎம் அறையிலிருந்த சிசிடிவி கேமராவை உடைத்தபோது அலாரம் ஒலித்ததால் பயந்துபோய் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவித்தான், மயிலாடுதுறை அருகே உள்ள கோடங்குடியை சேர்ந்த முருகன் மகன் கார்த்திகேயன்(23) எனதெரியவந்தது. மயிலாடுதுறை போலீசார் கார்த்திகேயனைக் கைதுசெய்து காவலில் அடைத்தனர். முதன்முதலாக திருட முயற்சித்தபோது சிக்கியதாக கூறினான்.