கரூர் மாவட்டம், ஈரோடு சாலையில் உழைப்பாளி நகர் அருகே தனியார் கிரசர் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கன்வேயர் பெல்டில் பாம்பு ஒன்று சீறிக் கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கரூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கரூர் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்குள்ள கன்வேயர் பெல்ட் வெல்டிங் மேல் உயரமான பகுதியில் பாம்பு சீறிக் கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் கன்வேயர் பெல்டில் இருந்த 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பினை லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனப் பகுதிக்கு கொண்டு சென்ற பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.