ஞானோதயம் கல்வி அறக்கட்டளை மற்றும் ஷேத்ரா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் ஸ்கூல் இணைந்து நடத்திய கல்வி மற்றும் கோடை பற்றிய விழிப்புணர்வு பேரணி கரூர் பேருந்து நிலையம் அருகே துவங்கியது. இந்த பேரணியை அமைப்பின் யோகா மைய பொறுப்பாளர் இளங்கோ, கரூர் காவல் ஆய்வாளர் மிதுன் குமார் இணைந்து கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் இந்த அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்தி கரூர்- கோவை சாலையில் உள்ள முனியப்பன் கோவில் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மனிதனின் வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவம்
உணர்த்தும் வகையிலும், கோடையினால் ஏற்படும் தாக்கத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், கோடையினால் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதிலிருந்து மனிதர்கள் எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.