தஞ்சை அருகே வல்லம் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ராம்குமார் (30). இவர் கோழிப்பண்ணை உரிமையாளர். ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர். அன்று மாலை ராம்குமார் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது டிவி ,கம்ப்யூட்டர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ராம்குமார் வல்லம் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வல்லம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சுதாகர்(30) மற்றும் 17 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்கள் சேர்ந்து ராம்குமார் வீட்டில் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து வல்லம் சப்- இன்ஸ்பெக்டர் ஜோஸ்வின் சித்தாரா மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுதாகர் மற்றும் இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ராம்குமார் வீட்டில் திருடப்பட்ட பொருள்களையும் போலீசார் மீட்டனர். சிறுவர்கள் 2 பேரும் சிறுவர் கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுதாகர் சிறையில் அடைக்கப்பட்டார்.