ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சுதர்சன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் புதிதாக வீடு வாங்க தனது வீட்டில் 4 பேக்குகளில் ரூ.2.80 கோடி ரொக்கப்பணம் வைத்திருந்தார். இன்று பூட்டியிருந்த வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 4 பேக்குகளில் ரூ.2.80 கோடியையும் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுபற்றி சுதர்சன் அளித்த புகாரின் பேரில், கோபிசெட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:கொள்ளை