சென்னையில் நேற்று நடந்த இந்திய சிவில் சர்வீஸ் பணித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இதனை வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர். என்று கூறினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
இதுபற்றி இயக்குனர் பா.ரஞ்சித் கூறுகையில், ஆளுநர் தன்னுடைய வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார். அவரின் போக்கு மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்து ஏதாவது பேசி பொது சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். எந்த தகவலின் அடிப்படையில் ஆளுநர் இவ்வாறு பேசுகிறார் என்பது தெரியவில்லை. ஆளுநரின் பேச்சு தவறுதான், அதனை ஏற்க முடியாது என்று கூறினார்.