தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இதையடுத்து புதிய மாவட்டத்தின் ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதியாக அலெக்சாண்டர், துணை வட்டார தளபதி கோதம் சந்த் ஆகியோரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது 150 ஊர்க்காவல் படையினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், புதிதாக பொறுப்பு ஏற்ற கமாண்டர் மற்றும் துணை கமாண்டர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா சான்றிதழை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள 40 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கு வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
