திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் திருத்தேர் திருவிழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோர் சாமி தரிசனம் செய்து இரண்டு தேர் செல்லும் பாதையை ஆய்வு மேற்கொண்டனர்.
32 அடி உயரமுள்ள ஓலப்பிடாரியம்மன் தேரும் 29 அடி உயரமுள்ள மதுர காளியம்மன் 2 தேர்களும் செல்லும் பாதையை ஆய்வு மேற்கொண்டனர். தேர் செல்லும் பாதை கோட்டைமேடு வெங்கடேஸ்வரா தியேட்டர் சந்தப்பேட்டை பவளக்கடை வீதி தெற்கு ரத வீதி வடக்கு ரத வீதி மதுர காளியம்மன் கோவில் தெரு, வானபட்டரை காரணர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்
ஆய்வின் போது முசிறி கோட்டாட்சியர் மாதவன் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தொட்டியம் வட்டாட்சியர் ஞானமிர்தம் தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் கோவில் செயல் அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.