கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சியில் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நந்தனூர், முஷ்ட கிணத்துப்பட்டி, வெஞ்சமாங்கூடலூர், பாகநத்தம் ஆகிய பல்வேறு பகுதிகளில் கடும் பணி பொழிவு பெய்து வருகிறது. கரூர்-
திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் கடும் பணி பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளனர். மேலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்கின்றன. வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு இருப்பதால் கனரக வாகனங்கள் சற்று நேரம் நிறுத்தி வைத்து, பின்பு செல்கின்றன.