பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கட்டிடத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விசிகவின் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீர செங்கோலன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கலையரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர்களான வழக்கறிஞர் ஸ்டாலின், உதயகுமார், சட்டமன்ற தொகுதி செயலாளர் ரத்தின வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வேறு கட்சியிலிருந்து விலகி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளன்று “சனாதானத்தை ஒழிப்போம், சனநாயகத்தை பாதுகாப்போம் ” என்ற தலைப்பில் மாபெரும் நடை பயண பேரணி பெரம்பலூர் சங்குப் பேட்டையில் துவங்கி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையில் முடிவு பெற்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றல்
மேலாக ஏப்ரல் 18 அன்று அம்பேத்கரின் பிறந்தநாளையோட்டி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடத்துதல், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில , மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்