அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகரில், அரியலூர் மாவட்ட தி.மு.க சார்பில் இனமானப் பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்,மாவட்ட கழக செயலாளர், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் வெ.கொ.கருணாநிதி வரவேற்புரையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், தலைமை கழக பேச்சாளர் ஆத்தூர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியன்,ஒன்றிய கழக செயலாளர்கள் தன.சேகர்(ஜெயங்கொண்டம் வடக்கு), இரா.மணிமாறன்
(ஜெயங்கொண்டம் தெற்கு) ரெங்க.முருகன் (ஆண்டிமடம் வடக்கு), ஆர்.கலியபெருமாள் (ஆண்டிமடம் தெற்கு), ஆண்டிமடம் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் க.தருமதுரை,உடையார்பாளையம் பேரூர் செயலாளர் பா.கோபாலகிருஷ்ணன், வரதராஜன்பேட்டை பேரூர் கழக செயலாளர் அல்போன்ஸ்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சி.ஆர்.எம்.பொய்யாமொழி, ஆர்.எம்.அன்பழகன்,மாவட்ட பொருளாளர் கு.இராஜேந்திரன்,மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.ராமதுரை, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் தங்க.ராமகிருஷ்ணன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராமராஜன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பானுமதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குலோத்துங்கன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.