திருச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 449பள்ளிகளைச் சார்ந்த மாணவ-மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 172மையங்களில் 17,494 மாணவர்களும், 17,363 மாணவிகளும் என மொத்தம் 34,857 மாணவ, மாணவியரும் பொதுத் தேர்வினை
எழுதவுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான அளவு இருக்கை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கான மின்சார வசதி மற்றும் போக்குவரத்து வசதியும் சார்ந்த துறை
மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
265 தேர்வு பணியில் 133 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 133துறை அலுவலர்கள், 20வினாத்தாள் கட்டுப்பாளர்கள், 30வழித்தட அலுவலர்கள், நிலையான மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள், 2407தேர்வறை கண்காணிப்பாளர்கள் 229சொல்வதை
எழுதுபவர்கள், மற்றும் 275 அலுவலகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலையில் மாணவ-மாணவிகள் தங்களது பள்ளிக்கு வந்து தேர்வு எழுதுவதற்காக தங்களை தயார் படுத்தி கொண்டனர். அவர்களுக்கு கடைசி நேரம் எந்தவித பதட்டம் ஏற்படாமலும், கொடுக்கப்பட்டுள்ள விடைத்தாள்களில் சரியாக படித்துவிட்டு தேர்வு எழுதுவதற்கான அறிவுரைகளை ஆசிரியர்கள் மாணவ- மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர்.