திருச்சி மாவட்டம் , முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்தின் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொப்பம்பட்டியில் தனது பெட்டிக்கடையில் நாடார் தெருவை சேர்ந்த ஜெயக்கொடி (50) , கீரனூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கல்லுப்பட்டியைச் சேர்ந்த உமா(31) வும் , அரசு மதுபானங்களை பதுக்கி திருட்டுத்தனமாக அதிக விலைக்கு விற்பதை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பெண்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
