நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இரட்டை குழந்தை பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டம் வழுத்துரில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் , விக்னேஷ் சிவனின் குலதெய்வம் ஆகும். பங்குனி உத்திர திருநாளான இன்று விக்னேஷ் சிவனும், நயன்தாராம் தம்பதி சமேதராய் வந்து அங்கு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். மேலும் பயபக்தியுடன் பொங்கல் வைத்தனர்.
திருமணத்திற்கு முன் இருவரும் இந்த கோவிலுக்கு வந்த நிலையில், தற்போது இருவரும் மீண்டும் இன்று தம்பதியராய் கோவிலுக்கு வந்தனர். இவர்கள் வருகையை ஒட்டி அம்மனுக்கு பால். தயிர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நொண்டி கருப்பு, முனியாண்டவர், மதுரைவீரன்,
அரியத்தங்கால் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு. தீபம் காட்டி இருவரும் பயப்பக்தியுடன் வழிபட்டனர். மூலவர் சன்னதிக்குள் அபிஷேகம் நடப்பதை வீடியோ எடுக்கக்கூடாது என தடுத்த விக்னேஷ் சிவன் தன் உடன் அழைத்து வந்த வீடியோகிராபரை விடியோ எடுக்க வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார்.
பின்னர் அவர்கள் கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். நயன்தாரா வந்திருப்பதை அறிந்த பக்தர்கள் அங்கு திரண்டனர். சில பெண்கள் நயன்தாராவுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நயன் -சிவன் ஜோடி கார்மூலம் தஞ்சை புறப்பட்டு சென்றது.