நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் சின்ன தும்பூர் பாலம் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது சுமார் 30 லட்சம் மதிப்பிலான 400 கிலோ பதப்படுத்தப்பட்ட 10 பெட்டிகளில் கடல் அட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது விசாரணையில் பாப்பா கோவிலை சேர்ந்த
சகோதரர்கள் சிங்காரவேல் மற்றும் அவரது தம்பி கேசவன் ஆகியோர் அக்கரைப்பேட்டையில் இருந்து டாட்டா ஏசி வாகனத்தில் ராமேஸ்வரத்திற்கு மேற்கண்ட கடல் அட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது இதனை அடுத்து மேற்கண்ட இருவரையும் வாகனத்தையும் கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்த வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இதில் தொடர்புடைய சில நபர்களை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடல் அட்டைகள் நாகையில் இருந்து ராமேஸ்வரம் கடத்திச் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.