புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பஸ்நிலையத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றி,சுற்றி வந்தார். அடிக்கடி வந்த அவர் பொதுமக்களிடம்,கடைக்காரர்களிடம் யாசகம் பெற்றுவந்தார்.அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் உணவு வழங்கினர். அவரது பெயர் சரிதாமணி என்றார். ஊர்பெயர், மற்ற விபரங்களை அவர் கூறவில்லை.தான் ஒருவர் வீட்டில் வேலைபார்த்த தாக சொன்னார். நள்ளிரவில் 3 பேர் தன்னை ஒரு வாகனத்தில் ஏற்றி இங்கு வந்து இறக்கி விட்டு தப்பி விட்டதாக சொன்னார். சற்று மன நிலை பாதிக் கப்பட்டுள்ளார். காலில் அடிபட்ட காயம் உள்ளது. யார் அவர்? ஏன் இங்கு வந்து இறக்கி விட்டனர் என தெரிய வில்லை. கையில் இரட்டை இலை சின்னத்துடன் சதீஷ் என பச்சை குத்தப்பட்டுள்ளது. திருமயம் போலீசார் விசாரிக்கின்றனர்.