தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி – தஞ்சாவூர் சாலைப் பணிகள் 2024 ஜூன் மாதத்திற்குள் முடிவடையும், மாநில அரசின் அழுத்தத்தால் முதல் கட்ட பகுதியில் 45% பணிகள் முடிவுற்றுள்ளதாக மத்தியஅரசு மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் குறித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, கோவி. செழியன், துரை. சந்திரசேகான்(திமுக), எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கம்யூனிஸட், பாமக, தவாகா, காங்கிரஸ் உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த திர்மானத்தை கொண்டு வந்த திமுக சார்பில் டிஆர்பி ரா
ஜா பேசினார். அதைத்தொடர்ந்துமற்ற எம்.எல்ஏக்களும் பேசினார்கள். ராஜா பேசும்போது டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் ஏலம் நடத்துவது உள்நாட்டு மக்களை மதிக்காமல் நடத்துவது போன்றது என்றார்.
அடுத்ததாக நன்னிலம் காமராஜ்(அதிமுக) பேசினார். அவர் பேசும்போது நிலக்கரி சுரங்கத்தை தடுக்க முதல்வர் ஸ்டாலின் பிரதமரிம் போனில் பேசி இருக்கலாம், டெண்டரை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.அதன்பிறகு, காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, பாமக ஜி.கே. மணி பேசினார். அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின்னர் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிப்பார்.