பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் ஆகிய நன்னாளில் முருகப்பெருமான் வீட்டிருக்கும் ஆலயங்களில் திருதேரோட்டம் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் சர்க்கார் பாளையத்தில் காவிரி தென்கரையில் வீட்டிற்கும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தின்
உட்பிரகாரத்தில் அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி சன்னதிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் காவடி அழகு போன்றவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்கிற கோஷம் முழங்க பக்தர்கள் முருகப்பெருமானை பக்தி பரவசத்தோடு வழிபட்டு சென்றனர் இந்த விழாவில் சர்க்கார் பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர்.