பிரபல தொலைக்காட்சி ஜீ தமிழ் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரமணியம்மாள். அந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பல இளம் பாடகர்களுடன் போட்டிப்போட்டி ரன்னர் அப் ஆனார். இந்த நிகழ்ச்சியின் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
42 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வந்த ரமணியம்மாள் பாட்டி, முதன்முதலில் சினிமாவில் தான் பாட தொடங்கினார். கடந்த 2018-ஆம் ஆண்டு கரண் நடிப்பில் வெளியான ‘காத்தவராயன்’, விஜய் சேதுபதியின் ‘ஜூங்கா’, விஷாலின் ‘சண்டகோழி 2’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, சூர்யாவின் ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களில் பாட்டு பாடி ரசிகர்களை கவர்ந்தார்.
தனது சொந்த உழைப்பால் உயர்ந்து வந்த ரமணியம்மாள் பாட்டி இன்று திடீரென மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.