சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 கட்ட அகழாய்வு பணிகளின் போது பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் ஏராளமாக கிடைத்தன. இவை அனைத்தும் 2600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வுகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் மற்றும் திருவண்ணாமலை கீழநமண்டியில் அகழாய்வு பணிகளை 6-ம் தேதி (நாளை மறுநாள்) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.