சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தமான் ஆகியோர் அடங்கிய குழுவை கலாஷேத்ரா அறக்கட்டளை அமைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற கலாக்ஷேத்ரா நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம் என கலாக்ஷேத்ரா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர் ஹரி பத்மன் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மற்ற 3 அலுவலர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என கலாக்ஷேத்ரா அறிக்கை வெளியிட்டுள்ளது. எடுக்கப்பட்டுள்ள நடவடிக்களை கருத்தில் கொண்டு தேர்வுகளை எழுத வருமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது கலாக்ஷேத்ரா நிர்வாகம். மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு ஆனால் மாணவிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. தேர்வை நடத்துவதற்காக நிர்வாகம் இந்த நாடகம் ஆடுகிறது. பாலியல் புகாரில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றவே நிர்வாகம் முயற்சி செய்கிறது. நிர்வாகம் அமைத்துள்ள இந்த விசாரணைக்குழு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே என மாணவிகளும், அவர்களது பெற்றோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.