பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பலர் கலந்து கொண்டதாகவும், இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி, நடிகை ரகுல் பிரீத்சிங் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் போதைப் பொருள் தொடர்புடைய பணமோசடி வழக்கில், வரும் 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ரகுல் பிரீத்சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதே வழக்கில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏ. ரோஹித் ரெட்டிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.