பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிப்பறையில் ஈடுபட்ட ரவுடிகள் – குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் என கண்டறிந்து மூன்று மாதங்களில் 19 நபர்கள் மீது குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு பள்ளி கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த 23 நபர்கள் மீது கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 108 நபர்கள் மீதும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 36 நபர்கள் மீதும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 62 நபர்கள் மீதும் 371 நபர்கள் என குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 1766 நபர்கள் மீது உரிய சட்டப்பிரிவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது – திருச்சி மாநகர காவல் துறை ஆணையரகம்.