கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள பண்டுதகாரன் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா கலை விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா முன்னிட்டு பெண்களுக்கென்று ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு மாணவிகளிடம் உரையாற்றினார்.
பின்னர் கல்லூரி மாணவிகளை
உற்சாகப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இதில் பரதநாட்டியம், சினிமா பாடல்கள் உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் ஆடி கல்லூரி மாணவிகள் அசத்தினார்.
இதில் குத்தாட்டம் பாடலுக்கு பரதநாட்டியம் நடனமாடி கல்லூரி மாணவி அசத்தினார்,
அதே போல் பல்வேறு குத்தாட்ட பாடல்களுக்கு கல்லூரியில் உள்ள அனைத்து மாணவிகளும் தனித்தனி குழுவாக பிரிந்து குத்தாட்டம் ஆடினர்.