தஞ்சை அருகே வல்லம் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள இரட்டை அக்ரஹாரம் பகுதியில் நேற்று மாலை சுமார் 10 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது.
இதனால் அப்பகுதியில் குடியிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்தனர். உடன் இதுகுறித்து வல்லம்
பேரூராட்சிக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி உத்தரவின்படி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் பேரூராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஒரு வீட்டு பகுதியில் இருந்த அந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பை போட்டு எடுத்துச் சென்று காட்டுப்பகுதியில் விட்டனர்.