தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், வருவாய் கிராமங்களை பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு காலதாமதம் இன்றி பணி வரன் முறை செய்யவேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை முழக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பூதலூர் ஒன்றிய தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் பூதலூர் வட்ட தலைவர் பெஞ்சமின் தேவராஜ், செயலாளர் அன்பரசன், பொருளாளர் அருள் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.