கடந்த பிப்.22ம் தேதி அன்று தஞ்சாவூர் பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதில் ஒரு வீட்டில் 28 பவுன் நகைகளும், மற்றொரு வீட்டில் 3 பவுன் நகைகளும் திருடப்பட்டது. இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இந்த இரண்டு திருட்டு சம்பவங்களிலும் தொடர்புடைய நபர் மதுரையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்டகு தெரிய வந்தது. இதையடுத்து மதுரையில் பதுங்கியிருந்த பழைய திருட்டு குற்றவாளியான திண்டுக்கல், நத்தம், லிங்கவாடி வடக்குத்தெருவை சேர்ந்த தவமணி என்பவரின் மகன் வினோத் (எ) பூனைக்கண்ணு வினோத் (20) கடந்த 30ம் தேதி அன்று போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு வீடுகளிலும் திருட்டு போன 31 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர். தொடர்ந்து வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து, திருட்டுப்போன நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்த தஞ்சை மாவட்ட காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பாராட்டினார்.