சுங்கச்சாவடிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்பொழுது மீண்டும் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்திருப்பது என்பது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் எனவே சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி
வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சாலை பயணிட்டாளர்கள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்த கூடாது என்ற கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.