கோவை மாநகரில் பணிபுரியும் காவலர்களுக்கு அவர்களின் உடல்நலம் மற்றும் மன நலத்திற்காக சிறப்பு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.கோவை மாநகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாநகர காவல்துறையினருக்கு அவர்களது உடல் நலம் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் விதமாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்று சிறப்பு
யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது. பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த யோகாசனப் பயிற்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கோவை மாநகர காவலர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு எளிதில் அவர் செய்யப்படக்கூடிய பல்வேறு யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலுல் இதில் ஜே.எஸ்.எஸ் தனியார் மருத்துவமனை சார்பில் பல்வேறு யோகாசன நிகழ்ச்சிகளும் செய்து காண்பிக்கப்பட்டன.