திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் வழக்கமாக தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவது வழக்கம் ஆனால்
நேற்று ஹைதராபாத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்போது இந்த விமானத்தில் ஹைதராபாத்திற்கு பயணம் செய்ய இருந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் ராஜம் வயது 23, பட்டதாரியான இவர் ஹைதராபாத்திற்கு பணி புரிவதற்காக விமானத்தில் செல்ல இருந்த நிலையில்
இவரது உடமையில் வெடிக்காத துப்பாக்கி தோட்டா இருப்பதை கண்டறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதனை பறிமுதல் செய்து சந்தோஷ் ராஜத்தை ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த துப்பாக்கி தோட்டா எங்கிருந்து தனது உடமைக்கு வந்தது என்று தெரியவில்லை என சந்தோஷ் ராஜம் தெரிவித்ததாக தெரியவருகிறது இதனைத் தொடர்ந்து இவர் மீது வழக்கு பதிவு செய்த ஏர்போர்ட் போலீசார் அவரை ஜாமினில் விடுதலை செய்தனர் இதனால் விமான நிலைய பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.