Skip to content
Home » பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் திருட்டு…..

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 பவுன் திருட்டு…..

  • by Authour

சென்னை அபிராமிபுரம் பகுதியில் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு உள்ளது. இவரது வீட்டில் 60 பவுன் தங்க, வைர நகைகள் மாயமாகி உள்ளதாக விஜய் யேசுதாசின் மனைவி சென்னை அபிராமி புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பாதாக புகாரில் தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை மேற்கொண்டு உள்ளனர். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மகள் வீட்டில் 200 பவுன் நகைகள் வீட்டு வேலைக்கார பெண் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *