கடந்த மார்ச் 12ஆம் தேதி இரவு பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள இந்திரா நகரில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரோஹித் ராஜ் என்ற 14 வயது உடைய சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் , ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த அய்யனார், 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கொண்ட நபர்கள் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். அவர்களை பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான குழுவினர் தேடி வந்த நிலையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி சீனிவாசன், அய்யனார் மற்றும் 3 சிறுவர்கள் ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பி இருந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர் திருவள்ளுவர் நகர் பெரியார் சிலை பின்புறம் வசிக்கும் எலி என்ற ராகுல் என்ற இளைஞரை போலீசார் தேடி வந்த நிலையில் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் எலி என்ற ராகுல் சரணடைந்தார். இவ்வழக்கில் தொடர்புடைய ரஞ்சித் என்ற இளைஞர் ஏற்கனவே சரணடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்
சிறுவன் கொலை வழக்கில்…. பெரம்பலூர் போலீஸ் ஸ்டேசனில் வாலிபர் சரண்..
- by Authour
