Skip to content

ஓசி பயணம்…. மூதாட்டியை தரக்குறைவாக பேசிய கண்டக்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

தஞ்சையிலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில்  அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அதே பஸ்சில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு கண்டக்டர் அந்த மூதாட்டியிடம் தரக்குறைவாக பேசியுள்ளார். அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் …. காசு ஓசின்னா போயிட்டு போயிட்டு வருவியா..? என கேட்கிறார். இதற்கு அந்த மூதாட்டி காசு ஓசி என்று நான் போகவில்லை என்றும், ஏன் தம்பி கோபமாக இப்படி பேசுகிறார் நான் மாலை போட்டு உள்ளேன். கோபமா பேசுறேயே என்று பரிதாபமாக கேட்கிறார். மேலும் எங்கு ஏறுவது என்று எனக்கு தெரியாது. நான் துசாக இங்கு வந்திருக்கிறேன் என்றும் கூறுகிறா். இக்காட்சிகளை அங்கிருந்த சகப்பயணி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். தற்போது அக்காட்சிகள் வைரலாகி வருகிறது. இக்காட்சிகள் வௌியானதை அடுத்து தமிழக அரசு போக்குவரத்துக் கும்பகோண கோட்ட பொது மேலாளர் மானங்கோரையை சேர்ந்த கண்டக்டர் ரமேஷ்குமாரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!