திருச்சி பாலக்கரையில் உள்ள மனிதநேய அனைத்து வர்த்த நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்….
திருச்சியில் சுமார் 25ஆண்டுகளுக்கு மேலாக சத்திரம் பேருந்து நிலையம், கல்லூரி சாலை, என்எஸ்பி ரோடு, தெப்பக்குளம், தெப்பக்குளம் ஆர்ச், பெரியகடை வீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தரை கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இந்நிலையில் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு என்பவர் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து தரைக்கடை வியாபாரத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என மனு அளித்திருக்கிறார் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின் படி முழுமையாக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க சங்க உறுப்பினர்கள் தயாராக உள்ளனர். எனவே, மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி மேயர்,
அமைச்சர்கள் எங்கள் வாழ்வாதாரத்தை காக்க முன்வர வேண்டுமெனவும், மேலும், தமிழக அரசும் எங்கள் வாழ்வாதாரத்தில் காக்க உடனடியாக நடவடிக்கை வேண்டும் இல்லையென்றால் தலைமையில் ஆலோசனைப்படி விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். பேட்டியின் போது மனிதநேய அனைத்து வர்த்தக நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர் கபீர்முகமது, பொருளாளர் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் காசிம், ராஜ்முஹம்மது முஸ்தபா ஆகிய உடன் இருந்தனர்.