திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலம்பாக்கம் கிராமத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.53 லட்சம் மதிப்பீட்டில் தாழிக்குளம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த விதைப் பண்ணையத்தினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்
தொடர்ந்து விரகாலூரில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.