தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து இரத்த தான முகாமை அய்யம் பேட்டை அடுத்த அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தின. இதில் தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் காயத்ரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் 50 மாணவர்களிடமிருந்து இரத்தத்தைச் சேகரித்தனர். இதேப் போன்று வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடந்தது. மாணவர்கள், ஊழியர்களுக்கு இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியப் பட்டது. பொது சிகிச்சை மேற்க் கொண்டு மாத்திரைகள் இலவசமாக வழங்கப் பட்டன. 162 மாணவர்களுக்கு இரத்த வகை கண்டயறியப் பட்டன. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக், டாக்டர்கள் ராம் குமார், ஜெகன்னாத், பாரதி, சுகாதார ஆய்வாளர்கள் செல்லப்பா, நாடி முத்து, பாலிடெக்னிக் பிரின்சிபால் தமிழரசு, பிரின்சிபாலின் பிஏ முகமது பிரான் சரீப் உட்பட பங்கேற்றனர். பட விளக்கம்: அய்யம் பேட்டை அடுத்த ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரத்த தான முகாம் நடந்தது.