Skip to content
Home » ராகுல் விவகாரம்….அடிப்படை ஜனநாயகம் இருக்க வேண்டும்….ஜெர்மனி

ராகுல் விவகாரம்….அடிப்படை ஜனநாயகம் இருக்க வேண்டும்….ஜெர்மனி

  • by Senthil

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது.  இதுபற்றி ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, இந்தியாவின் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக முதன்முறையாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றிய விசயங்களை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். அவரது, நாடாளுமன்ற எம்.பி. பதவி முடக்கம் பற்றியும் கவனம் கொண்டுள்ளோம். நாங்கள் அறிந்த வரை, இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கூடிய ஒரு நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார் என தெரிவித்து உள்ளார்.

அதன்பின்னர், இத்தீர்ப்பு நிலையானதொன்றா? என்றும் அவரது பதவி முடக்கம், ஏதேனும் ஓர் அடிப்படையில் உள்ளதா? என்பது பற்றியும் தெளிவாக தெரிய வரும் என்று அவர் கூறியுள்ளார். இந்த விசயத்தில், நீதிமன்ற சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கைகள் இருக்க வேண்டும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் பற்றி நாங்கள் கவனித்து வருகிறோம் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறியிருந்தது. இதனை தொடர்ந்து, ஜெர்மனியும் இந்த விவகாரத்தில் பதிலளித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!