தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) உள்ள விலங்கியல் துறை சார்பாக தேனீ வளர்ப்பு பற்றி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி தலைமை தாங்கினார். விலங்கியல் துறைத்தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் வேங்கடலெட்சுமி வரவேற்புரையாற்றினார். சேலம் ஏஓ தேனீ வளர்ப்பு பண்ணை நிறுவனர் அண்ணாமலை மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு பற்றி விளக்க உரையாற்றி பயிற்சியளித்தார். இந்த பயிற்சி பட்டறையை முனைவர் கவிதா ஒருங்கிணைத்திருந்தார். இதில் சுமார் 15 ஆசிரியைகளும், 60 மாணவிகளும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.