சுவீடன் நாட்டின் உப்சலா சர்வதேச ஜிம்மாசைட் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சுவீடன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பிரிட்ரெக் லண்ட் மற்றும் துணை முதல்வர் கரிண் ஹோல்சன் தலைமையில் வந்துள்ளனர். இந்திய பள்ளிகள் மற்றும் மாணவர்களின் கல்வி முறைகள் குறித்து அறிந்து கொள்ள இவர்கள் வருகை தந்துள்ளனர். இந்த குழுவினர் நேற்று திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தனர். அவர்களை தலைமை ஆசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்றனர்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்க நெறிமுறைகள் பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர் என அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.
முதலில் குத்து விளக்கேற்றி பள்ளியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் குடிலில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்து அவர்களுக்கு மாணவர்கள் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி தொடங்க நடைபெறும் காலை வழிப்பாட்டுடன் தமிழ் தாய் வாழ்த்து கொடியேற்றுதல் தேசிய கீதம் உள்ளிட்ட அன்றாட நடப்புகளை பார்த்தனர்.
இதனை தொடர்ந்து தமிழர்களின் தற்காப்பு கலைகளான சிலம்ப விளையாட்டினை மாணவர்கள் செய்து காட்டினர். இதனை ஆர்வத்தோடு அவர்கள் ரசித்து பார்த்தனர். , நாட்டுப்புறப்பாட்டு, கரகாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தற்காப்புகலை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சென்னை இரட்டையர்கள்
சர்வதேச இளம் எக்ஸ்னோரா மாணவர்களின் தூதுவர் மாஸ்டர் ஹர்பித், செல்வி ஹர்பிதா ஆகியோர் மாணவர்களுக்கு உத்வேகம் தரும் வகையில் உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து வகுப்புகளில் ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள். மாணவர்கள் அதற்கு எவ்வாறு பதில் அளிக்கின்றனர் என சுவீடன் நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் பார்வையிட்டனர். இதை தொடர்ந்து நமது அரசு பள்ளி மாணவர்கள் சுடவீன் நாட்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
சர்வதேச இளம் குழந்தைகள் சமூக நல அமைப்பின் நிறுவனர் மோகன் வாழ்த்துரை வழங்கினார். ஸ்வீடன் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் நந்தலாலா,சந்தானம், சங்கரி ஆகியோர் மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக ஹியூமரஸ் பானு நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிகளை உதவி தலைமை ஆசிரியர் தேன்மொழி தொகுத்து வழங்கினார்.