கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் கொடுக்கப்படும் மனுக்கள் மீதான உரிய விசாரணை மேற்கொள்ள கரூர் மாவட்டத்திலுள்ள உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர், நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர், கணிணி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆகியோர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், உத்தரவு பிறப்பித்துள்ளதின் பேரில், இன்று பொதுமக்கள் சிறப்பு மனு விசாரணை முகாம் (Petition Mela)
தாந்தோணிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், தலைமையில் நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் இன்று மட்டும் 101 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மனுதார் மற்றும் எதிரிமனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்து ஒரே நாளில் 51 மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.
மேலும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக சாலை விபத்துக்களை தடுத்தல், விபத்து வாகனங்களை உடனடியாக ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை வழங்குதல் தொடர்பாக கரூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், தலைமையிடம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் கரூர் நகரம், கரூர் ஊரகம், குளித்தலை உட்கோட்டங்கள் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு, ஆய்வாளர்கள், நில அபகரிப்பு பிரிவு, கணிணி குற்றப்பிரிவு (Cyber Crime) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.