கோவை மாவட்டம், சூலூரில் ஊராட்சி மன்ற அதிகாரியிடம் குடிக்க ஐம்பது ரூபாய் பணம் கேட்டு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற குடிமகனின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அரசூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ளது ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அலுவலகத்திற்கு வந்து வருவாய் துறை அதிகாரியிடம் 50 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.பணம் கேட்கும் போது அதீத போதையில் இருந்த நபரிடம் பணம் இல்லை என அதிகாரி தெரிவித்துள்ளார்.இதனால் கோபமடைந்த அந்த நபர் வெளியே சென்று வெளியில் நின்று கொண்டிருந்த அதிகாரியின் இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.இது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அதிகாரி சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த சூலூர் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.